வருவாய்துறை ஊழியருக்கு கொலைமிரட்டல்: அ.தி.முக பிரமுகர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
திருத்துறைப்பூண்டியில் வருவாய்துறை ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து கொல மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க ஒன்றிய செயலர் கே.சிஙகராவேலு உள்ளிட்ட மூவர் மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு
திருத்துறைப்பூண்டியில் வருவாய்துறை ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து கொல மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க ஒன்றிய செயலர் கே.சிஙகராவேலு உள்ளிட்ட மூவர் மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல்சரகம் தலைக்காடு பகுதியில் செவ்வாய்கிழமை தனிவட்டாட்சியர் காளீóஸவரன் ரோந்து சென்ற போது, உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 டிராக்டர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படை செய்தார்.இதுதொடர்பாக அ.தி.மு.க ஒன்றிய செயலர் கே.சிங்காரவேலு,வீரசேகர், முருகதாஸ் ஆகியோர் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அங்கு இருந்த வட்டாட்சியரின் டிரைவர் உலகநாதனிடம், மூவரும் தரக்குறைவாக பேசி,பணிசெய்ய விடாமல் தடுத்து, கொலைமிரட்டல் விடுத்தனராம்.
இதுதொடர்பாக டிரைவர் உலகநாதன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.