முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை: ரயிலில் இருந்து தவறி விழுந்தஇளைஞர் கை துண்டிப்பு

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வலது கை துண்டிக்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வலது கை துண்டிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா (24). கட்டடத் தொழிலாளியான இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்தாராம்.

ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து ராஜா பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ரயில் செய்துங்கநல்லூரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்த் ராஜா தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ராஜா சிகிச்சை பெற்று வருகிறார். திருநெல்வேலி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →