நெய்வேலியிலிருந்து மத்திய பாதுகாப்புபடையை திரும்ப பெற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி கோரிக்கை
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சுரங்கத் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை திரும்ப பெற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சுரங்கத் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை திரும்ப பெற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்க் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம்:
கடந்த மார்ச் 17-ம் தேதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளி ராஜ்குமாரை 2வது சுரங்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பரை சந்திக்க அடையாள அட்டையை காண்பித்து அனுமதி கோரியுள்ளார். மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் அனுமதி மறுத்து தடுத்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் சந்திக்க விரும்பிய நண்பரிடம், ராஜ்குமார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது பாதுகாப்பு படையைச் சேர்ந்த என்.ட்டி,நோமன் என்பவர் ராஜ்குமாரின் தலைமையில் சுட்டுள்ளார். மூன்று சுற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மூளை சிதறி இளம் தொழிலாளரி இறந்துள்ளார்.
இந்த கொடிய நிகழ்வு சுரங்கத் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை செயலை கண்டித்து சுரங்கத் தொழிலாளர்கள் நெய்வேலி-விருத்தாசல் சாலையில் மறியல் போராட்டம் செய்தனர். மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமான தடியடியும், கண்ணீர் புகைக்குண்டு வீச்சும் நடசத்திதோடு, அக்கம், பக்கம் வீடுகளில் புகுந்தவர்களை வெளியே இழுத்து வந்து அடித்து தமிழக காவல்துறை தனது பங்கிற்கு அத்துமீறலை நிகழ்ச்சியுள்ளது.
என்எல்சி நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டதிலிருந்து தொழிலாளருக்கும், பொதுமக்களுக்கும் எதிராக தொடர்ச்சியான அத்துமீறல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் ஆனந்தன் என்ற தொழிலாளர் இப்படையினரால் தாக்கப்பட்டுள்ளார். எனவே நெய்வேலி நிலக்கரி நிறுவன நிர்வாகம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை விலக்கிக் கொள்ள ஆவண செய்ய வேண்டும்.
தொழிலாளர் ராஜ்குமாரை துப்பாக்கியால் துட்ட பாதுகாப்புபடை காவலர் நோமன் மீதும், துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய பிற அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தி தொழில் பாதுகாப்பு படையினரை பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். கொலையுண்ட ராஜ்குமார் குடும்பத்திற்கு என்.எல்.சி நிர்வாகம் ரூ.20 லட்சம் இழப்பீடும், அவருடைய மனைவிக்கு தகுதிக்கேற்ற வேலையும் வழங்கிட வேண்டும் என அறிக்கையில் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.