கோவையில் பா.ஜ.க வேட்பாளரை மாற்றக் கோரி உண்ணாவிரதம்
தமிழ்நாட்டில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அந்த கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும், மூத்த தலைவர் இல.கணேசன் தென் சென்னை தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
கோவையில் பாஜக வேட்பாளரை மாற்றக் கோரி பாஜகவினர் சிலர் அக்கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.