முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் பிரசாரம்: ஞானதேசிகன்

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழ்நாடு

Updated On : 21 மார்ச், 2014 at 7:25 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:16 AM

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 9 தொகுதிகளுக்கும் ஓரிரு நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கணிசமான வாக்குகளைப் பெறும்.தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்கள் வரும் தேதியும், இடமும் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் இலங்கைத் தமிழர் பிரச்னை எதிரொலித்தது இல்லை. இந்தத் தேர்தலிலும் எந்தப் பாதிப்பையும ஏற்படுத்தாது. தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்த தீர்வு இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடி உதவிகளை அளித்துள்ளது. இதனை மக்களிடம் பிரசாரம் செய்வோம்.

Advertisement

பாஜக தலைமையில் ஜாதி, மத உணர்வு கொண்ட கட்சிகள் இணைந்துள்ளன.  கொள்கை முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ள இந்தக் கூட்டணியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார் ஞானதேசிகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.