திருவெறும்பூரில் கத்தியை காட்டி நடந்து சென்ற பெண்ணிடம் 21 பவுன் செயின் பறிப்பு
திருச்சி திருவெறும்ப்பூரில் ஹெல்மெட் அணிந்தபடி வாகனத்தில் வந்து நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 21 பவுன் செயினை பறித்து சென்றுள்ளார்.
திருச்சி திருவெறும்ப்பூரில் ஹெல்மெட் அணிந்தபடி வாகனத்தில் வந்து நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 21 பவுன் செயினை பறித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:--திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில் விக்னேஷ் தெரு 4வது தெருவைச் சேர்ந்த நாகராஜ் இவர் எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றுகிறார் இவரின் மனைவி சாவித்திரி ( 41) அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று திரும்பிய போது பின் பக்கமாக திடீர் என இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி 21 பவுன் செயின் பறித்து சென்றுள்ளார். அவர் ஹெல்மட் அணிந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.