தற்போதைய செய்திகள்

வாக்குகளைப் பெற தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: முதல்வர் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர், வாக்குகளைப் பெறுவதற்காக தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றுகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

ஜெயப்பாண்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர், வாக்குகளைப் பெறுவதற்காக தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றுகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

மேலும், நதிகளை இணைப்பது என்பது பாரதி கண்ட கனவு; அதை அதிமுக நிறைவேற்றும். ஆனால் 14 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக., தனது தேர்தல் அறிக்கையில், தற்போது நதிகளை இணைப்போம் என்று கூறுகிறது. இது வாக்குகளைப் பெற ஏமாற்றுவதாக உள்ளது.

ஒவ்வொரு தேர்தலிலும் திமுக இதைத்தான் கூறுகிறது. கடந்த கால காங்கிரஸ் அரசில் திமுகவும் அங்கம் வகித்தது. ஆனால் தமிழக நலன்கள் பெரிதும் காவு கொடுக்கப்பட்டன. நதி இணைப்பு குறித்துப் பேசிய ராகுல் காந்தி, அது சாத்தியமில்லாதது என்றும், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தது அல்ல என்றும் கூறியபோது, திமுக அதை எதிர்த்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. அந்தக் கருத்தை எதிர்த்து அப்போது திமுக குரல் கொடுக்கவில்லை. இந்த நிலையில் நதிகளை இணைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறுவது வாக்குகளைப் பெற மக்களை ஏமாற்றும் செயல். கருணாநிதி தன் குடும்ப நலனுக்காக மக்கள் நலனை காவு கொடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டிப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT