முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் அடையாளம் தெரியாதவர் சடலம்

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் சனிக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் உடல் நீரில் மிதந்தது. இவர் துணிகளை துவைத்து கரையில் காயவைத்துவிட்டு, வெளாற்றில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:47 AM
பகிர்:

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் சனிக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் சடலம் மிதந்தது.

சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் சனிக்கிழமை காலை 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவர் உடல் நீரில் மிதந்தது. இவர் துணிகளை துவைத்து கரையில் காயவைத்துவிட்டு, வெளாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. கரையில் நீலக்கலர் பணியனும், வெள்ளை வேட்டியும் இருந்தது. இறந்து போனவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.