தேர்தலுக்கு பணம் எடு்த்துச்செல்வதாக புகார்: 108 ஆம்புலன்ஸிற்க்கும் தேர்தல் கட்டுப்பாடு!
கடந்த சில தினங்களாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பணம் கொண்டு செல்வதாக தகவல் வந்தது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனமான ஜிவிகே நிறுவனம் அனைத்து
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸிற்கும் தேர்தல் நேர நடத்தை விதிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பணம் கொண்டு செல்வதாக தகவல் வந்தது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் நிறுவனமான ஜிவிகே நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் தேர்தல் நேர நடத்தை விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை வழங்கியுள்ளது. அந்த சுற்றறிக்கையை வாகனத்தில் ஒட்டுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட சில விதிமுறைகள் வருமாறு:
விதிமுறைகள்: நோயாளிகள் உடன் வருபவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் பயனம் செய்யும் போது அவர்கள் எடுத்துவரும் பணம் எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும். அவர் தெரிவித்த விபரங்களை பிசிஆர் ஆவணத்தில் அவசர மருந்து சேவை உதவியாளர் பதிவு செய்ய வேண்டும். தொகையை அவர் தெரிவிக்க மறுத்தால், மறுப்பு விபரத்தையும் ஆவணத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், இதர உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் தவரி வேறு எந்த பொருட்களையோ அல்லது சாதனங்களையோ வைக்கக்கூடாது. அங்கீரிக்கப்படாத எந்த ஒரு நபரும் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு அனுமதிக்கூடாது. ஆம்புலன்ஸில் நோயாளிகளுடன் வருபவர் தேர்தல் சம்பந்தப்பட்ட சாதனங்களோ, பிரசாரம் சம்பந்தப்பட்ட சாதனங்களோ அல்லது விளம்பரத்திற்காக உள்ள பொருள்களோ வைத்திருந்த அவற்றை தவிர்த்து ஏற்ற வேண்டும்.
அவசர மருத்துவ சேவை உதவியாளரோ, ஓட்டுநரோ எந்த ஒரு கட்சிக்கும் சாதகமாகவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. தேர்தல் சம்பந்தப்பட்ட பிரசார இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தக்கூடாது. காவல்நிலையங்களில் எழுத்துப்பூர்வமாக அனுமதி கிடைக்கப்பட்டுள்ள கூட்டங்களுக்கு மற்றும் பேரணிகளுக்கு மட்டுமே ஆம்புலன்ஸ் பயன்ரடுத்த வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.