முகப்பு
தற்போதைய செய்திகள்

புள்ளம்பாடி அருகே பெண் தீயில் கருகி சாவு: கணவர் படுகாயம்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வெள்ளிóக்கிழமை இரவு பெண் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொண்டதால் பெண் சனிக்கிழமை உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற பெண்ணின் கணவர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:47 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வெள்ளிóக்கிழமை இரவு பெண் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொண்டதால் பெண் சனிக்கிழமை உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற பெண்ணின் கணவர் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

லால்குடி வட்டம், இ.வெள்ளனூர் அருகேயுள்ள நஞ்சைசங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் (29). சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் ஒட்டுநராக பணிபுரிகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 10 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர். அன்புராஜா-வுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாம்.இதனால் ஈஸ்வரி கணவரிடம் தகராறு செய்துள்ளாராம். வெள்ளிக்கிழமை இரவும் மது அருந்துவிட்டு வந்த அன்புராஜா-வுக்கும் ஈஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனக்கு தானே ஊற்றிக் கொண்டு தீயிட்டுள்ளார். உடனே தீயை அணைக்க முயன்ற அன்புராஜாவுக்கு பலத்த காயமடைந்தார். இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி உயிரிழந்தார்.

திருமணமாகி 5 வருடம் ஆனவதால் வரதட்சனை கொடுமை நடத்துள்ளதா என்பது குறித்து வருவாய்கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து லால்குடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →