கார் மோதி முதியவர் பலி: இருவர் காயம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதி முதியவரான அங்கமுத்து(55) பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.
தற்போதைய செய்திகள்கார் மோதி முதியவர் பலி: இருவர் காயம்
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதி முதியவரான அங்கமுத்து(55) பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு பகுதியில் திங்களன்று நடைபெற்ற சாலை விபத்தில் கார் மோதி முதியவரான அங்கமுத்து(55) பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் பகுதியை சேர்ந்த குள்ளன் மகன் அங்கமுத்து. விவசாய கூலியான இவர் அவரது மனைவி ராதாவுடன் பூவலம்பேட்டில் உள்ள வங்கியில் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்ததற்கான கூலியை வாங்க சென்று வங்கி முன் சாலையோரம் நின்றிருந்தார்.
அப்போது கவரப்பேட்டையில் இருந்து சத்தியவேடு நோக்கி வந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அங்கமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் அங்கமுத்துவின் மனைவி ராதா மற்றும் பூவலம்பேடு பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் மோகனா(9) என்ற சிறுமியும் காயமடைந்தனர். விபத்து நடந்ததும் காரை ஓட்டி வந்தவர் ஓட்டம் பிடித்தார்
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் கூடிய தேர்வாய் பகுதி பொதுமக்கள் விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதிரிவேடு போலீஸôர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.
இதன் பிறகு விபத்தில் பலியான அங்கமுத்துவின் உடல் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காயமடைந்த ராதா மற்றும் சிறுமி மோகனா ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் விசாரணை நடத்தி வருகின்றார்.