முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஸ்டாலின் பிரசாரத்தில் கூடுதல் வாகனங்கள்: அதிமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார்

சிதம்பரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் போது கூடுதல் வாகனங்களில் வந்ததாக, அதிமுகவினர் உதவி தேர்தல் அதிகாரியும். சிதம்பரம் உதவிஆட்சியருமான எம்.அரவிந்திடம் திங்கள்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:48 AM
பகிர்:

சிதம்பரத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் போது கூடுதல் வாகனங்களில் வந்ததாக, அதிமுகவினர் உதவி தேர்தல் அதிகாரியும். சிதம்பரம் உதவிஆட்சியருமான எம்.அரவிந்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

சிதம்பரம் மேலரதவீதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவனை ஆதரித்து திமுக பொருளாளர் ஞாயிற்றுக்கிழமை மாலை வேன் மூலம் பிரசாரம் செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் வாகனத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தேர்தல் விதிமுறைகளுக்கு மீறாக பிரசாரம் செய்துள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.கே.கலைமணி தலைமையில் அதிமுக நகர நிர்வாகிகள் சென்று உதவித் தேர்தல் அதிகாரி எம்.அரவிந்திடம் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.