முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லைக்கு துணை ராணுவம் வந்தது: பதற்றமான பகுதியில் அணிவகுப்பு

மக்களவைத் தேர்தல் பணியில் கூடுதல் பாதுகாப்பு பணிக்காக ஒரு கம்பெனி துணை ராணுவம் திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்தது.திருநெல்வேலி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:48 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் பணியில் கூடுதல் பாதுகாப்பு பணிக்காக ஒரு கம்பெனி துணை ராணுவம் திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை வந்தது.திருநெல்வேலி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் துணை ராணுவத்தினர், போலீஸார் அணிவகுப்பு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி ஆகிய 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய 6 தொகுதிகள் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலும், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 4 தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆகிய பேரவைத் தொகுதிகளும் தென்காசி மக்களவைத் தொகுதியில் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 13 ஆயிரத்து 549 வாக்காளர்கள் உள்ளனர். இதில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 13 லட்சத்து 84 ஆயிரத்து 212 வாக்காளர்களும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 357 வாக்காளர்களும் உள்ளனர்.

இம்மாவட்டத்தில் 2,707 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1,817 வாக்குச்சாவடிகளும், தென்காசி மக்களவைத் தொகுதியில் 1,090 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இம்மாவட்டத்தில் 531 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், இதில் 174 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் தமிழகத்திற்கு துணை ராணுவம் வரவழைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல் கட்டமாக திங்கள்கிழமை ஒரு கம்பெனி துணை ராணுவம் வந்துள்ளது. இதில் 80 பேர் இடம் பெற்றுள்ளனர்.மேலும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு கூடுதலாக துணை ராணுவத்தினர் வர இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் துணை ராணுவத்தினர், போலீஸார் பங்கேற்ற அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் டி.எஸ்.பி. பா. மணிமாறன் தலைமையிலும், சேரன்மகாதேவியில் டி.எஸ்.பி. ப. ராஜா தலைமையிலும் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →