சிதம்பரம் அருகே மூன்றரை அடி நீள மண்ணுளி பாம்பு பிடிபட்டது!
சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மூன்றரை அடி நீள மண்ணுளி பாம்பினை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
சிதம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மூன்றரை அடி நீள மண்ணுளி பாம்பினை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
சிதம்பரம் அருகே ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் மெயின்ரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு மண்ணுளி பாம்பு ஒன்றை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததாக வனத்துறையினருக்கு, ஒரத்தூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் மூன்றரை அடி நீளமும், 3 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பை பிடித்து, அருகாமையில் உள்ள பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.