முகப்பு
தற்போதைய செய்திகள்

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதால், இரண்டு மடங்கு விலைவாசி உயர்வு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதால், இரண்டு மடங்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. குறிப்பாக மின்கட்டணம், பஸ் கட்டணம் மற்றும் அனைத்து பொருள்களின் விலை இரண்டு மடங்காகிவிட்டது என திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:49 AM
பகிர்:

இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதால், இரண்டு மடங்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. குறிப்பாக மின்கட்டணம், பஸ் கட்டணம் மற்றும் அனைத்து பொருள்களின் விலை இரண்டு மடங்காகிவிட்டது என திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில், வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதரித்து  கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது. திருமாவளவன் வெற்றி பெற்றால் வன்முறை காடாக மாறிவிடும் என கடந்த தேர்தலில் பிரசாரம் செய்தனர். ஆனால் அவர் வெற்றி பெற்ற பின்னர் 5 ஆண்டுகள் இந்த தொகுதி அமைதியாக இருந்தது. எனவே மக்கள் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவர் வெற்றி பெற்றால் அமைதியாக வாழலாம். நமக்கு பாதுகாப்பு இருக்கும்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு காரில் வந்த ஜெயலலிதா, வெற்றி பெற்ற பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். தமிழகத்தில் 40 ஹெலிகாப்டர் தளம் யாருடைய செலவில் அமைக்கப்படுகிறது. அரசு செலவிலா, கட்சி செலவிலா என்ற குழப்பம் உள்ளது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் அரசு இடத்தில் போடப்பட்டுள்ளது. தனியார் இடத்தில் அரசு செலவு செய்ய முடியாது. அரசு இடத்தில் தனியார் செலவு செய்ய முடியாது. கடந்த 4 மாதமாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. கஜானா காலியாகிவிட்டது. அதிமுகவினர் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என நினைக்கின்றனர். எனவே நீங்களே தேர்தல் ஆணையமாக மாறி, கிராமப்புறங்களில் கண்காணித்து அதிமுகவினர் கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்து பங்கு போட்டு கொடுத்து விடுங்கள் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments