முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம்: ஒருவர் கைது

சிதம்பரம் அருகே உள்ள கீழகீரப்பாளையம் ஆற்றங்கரையைச் சேர்ந்த வேலு மகன் செந்தில்குமார் (33). இவர் வெள்ளிக்கிழமை சிதம்பரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில், நீதிபதி மருதுபாண்டி முன்னிலையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

சிதம்பரம் நீதிமன்றத்தில் வேறு ஒருவர் பெயரில் பிறப்புச்சான்றிதழ் கேட்டு ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகியவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே உள்ள கீழகீரப்பாளையம் ஆற்றங்கரையைச் சேர்ந்த வேலு மகன் செந்தில்குமார் (33). இவர் வெள்ளிக்கிழமை சிதம்பரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில், நீதிபதி மருதுபாண்டி முன்னிலையில் பிறப்புச்சான்றிதழ் வழங்கக்கோரி பஞ்சநாதன் என்ற பெயரில் ஆஜராகியுள்ளார். அப்போது நீதிபதி தந்தை பெயரை கேட்ட போது முன்னுக்கு, பின் முரனான தகவலை தெரிவித்ததால், ஆள்மாறாட்டம் செய்துள்ளது தெரியவந்தது. பின்னர் ஆள்மாறாட்டம் செய்த செந்தில்குமாரை, நீதிமன்ற உதவியாளர் மஞ்சுளா, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.