முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் - அழகிரி திடீர் சந்திப்பு : அரசியல் பேச்சு இடம்பெற்றதா?

சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும் அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர் அமரும் இடத்தில் சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

சென்னையில் இருந்து மதுரை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ப.சிதம்பரமும் அழகிரியும் ஒன்றாக பயணம் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் விஐபி லாஞ்ச் பயணியர் அமரும் இடத்தில் சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களது சந்திப்புக்குப் பிறகு, விமான நிலையத்தில் அவர்களை சந்திக்கக் காத்திருந்த செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் புறக்கணித்துவிட்டு இருவரும் சென்றனர்.

சிவகங்கை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள ப.சிதம்பரம் செல்கிறார்.

அண்மைக் காலமாக வரிசையாக ஆதரவு கேட்டு வேற்றுக் கட்சியினர் அழகிரியை முற்றுகையிடுவதால், அவர் தேர்தல் நேரத்தில் வெளிநாடு செல்லப் போவதாக தகவல் வெளியானது. 

இதனால், இவ்விரு தலைவர்களும் திடீரென விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். எனினும், இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து ஏதேனும் பேச்சு இடம்பெற்றதா என்பதே முக்கியக் கேள்வியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.