முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள திருச்சித்ரகூடம் ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணருக்கு பிரம்மோற்சவம் நாளை (மார்ச் 30) ஞாயிற்றுக்கிழமை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:50 AM
பகிர்:

சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள திருச்சித்ரகூடம் ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணருக்கு பிரம்மோற்சவம் நாளை (மார்ச் 30) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்.11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மார்ச் 30-ம் தேதி திருமஞ்சனம், மிருத்ஸங்க்ரஹணம், 31-ம் தேதி -திவ்ஜாரோஹணம், ஹம்சவாகன சேவை, ஏப்.1-ம்தேதி- யாளி வாகன தேவை, 2-ம் தேதி- சேஷவாகன சேவை, 3-ம் தேதி கருடவாகன சேவை, 4-ம் தேதி ஹனுமந்த வாகன சேவை, 5-ம் தேதி யானை வாகன சேவை, 6-ம் தேதி- மாலை சூர்னோத்ஸவம், ருக்மணி கல்யாணம், இரவு சந்திரபிரபை வாகனம், 7-ம் தேதி- குதிரை நம்பிரான் சேவை, 8-ம் தேதி காலை ரதோற்சவம்,  திருமஞ்சனம், இரவு சீதா கல்யாணம், 9-ம் தேதி காலை புஷ்பயாகம், மாலை ஸ்ரீஆஞ்சநேயர் உற்சவம், இரவு பட்டாபிஷேகம், புஷ்பப்பல்லக்கு, 10-ம் தேதி மாலை சதகலச திருமஞ்சனம், 11-ம் தேதி விடாயத்தி திருமஞசனம்.

தினம் காலை 6.30 மணிக்கு சுவாமி வீதிபுறப்பாடு, காலை 9 மணிக்கு திருமஞ்சனம், திருப்பாவை சேவை சாத்துமுறை, மாலை 4 மணிக்கு சேவாகாலம், இரவு 6.30 மணிக்கு சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறுகிறது. உற்சவம் ஏற்பாடுகளை டிரஸ்டிகள் டி.திருவேங்கடவன், வி.எஸ்.கிருஷ்ணமாச்சாரி, ஜே.சுதர்சனன் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.