தாமரைன்னு நினைச்சுக்காதீங்க... பம்பரம் பதியணும்: தென்காசி மதிமுகவினரின் பயம்!
கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை இரவு பாஜக கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாருக்கு வாக்களிக்கக் கேட்டு மதிமுக மாவட்டச் செயலர் சரவணன் பேசினார்.

அப்பொழுது அவர் கூறியது:
இந்திய முழுவதும் மோடி அலை, பாஜக அலை வீசி வருகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனால் அனைவரின் மனதிலும் பாஜகவின் சின்னமான தாமரைதான் உள்ளது. எனவே, தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பாஜக கூட்டணியிலுள்ள மதிமுக வேட்பாளர் என்பதையும், அவரின் சின்னம் பம்பரம் என்பதையும் அனைவரின் மனதிலும் பதிய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.