முகப்பு
தற்போதைய செய்திகள்

அடையாளம் தெரியாத கார் மோதி ஒருவர் சாவு

பின்னத்தூரைச் சேர்ந்த சோழமன்னன் (31). விவசாயியான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சிதம்பரத்தில் உள்ள தனது தங்கையை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது சி.முட்லூர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த சோழமன்னன் என்ற விவசாயி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

பின்னத்தூரைச் சேர்ந்த சோழமன்னன் (31). விவசாயியான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சிதம்பரத்தில் உள்ள தனது தங்கையை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது சி.முட்லூர் புறவழிச்சாலையில் ராகவேந்திரா கல்லூரி அருகே அடையாளம் தெரியாத கார், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சோழமன்னன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து சோழமன்னன் தம்பி சேரமன்னன் கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.