முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 மிக்சிகள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் பறக்கும் படை அதிரடி

சிதம்பரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை  பறக்கும்படையினர் சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மிக்சி, நான்-ஸ்டிக் தாவாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

சிதம்பரம் புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை  பறக்கும்படையினர் சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மிக்சி, நான்-ஸ்டிக் தாவாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் ஜி.பரிமேலழகன் (வேளாண்அதிகாரி) தலைமையிலான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் உள்ளிட்ட எஸ்எஸ்ஜி-3 பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை அவ்வழியே காட்டுமன்னார்கோயில் நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.  அப்போது வாகனத்தில் வந்தவர்கள் புதுச்சேரி கிருமாப்பாக்கத்திலிருந்து, புதுச்சேரி மண்ணடிப்பட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணம் வைத்திருந்தினர். ஆனால் மிக்சி, தாவாக்கள் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, காட்டுமன்னார்கோயிலுக்கு கொண்டு செல்வதாக தகவல் தெரிவித்துள்ளனர், முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததாலும், போதிய ஆவணங்கள் இல்லாததாலும் 165 பெட்டிகளில் 375 மிக்சிகள், 500 நான்-ஸ்டிக் தாவாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மிக்சி பெட்டிகளுடன், லாரியை சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பறக்கும்படையினர் புகார் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments