மதுரை விமானத்தில் பணம் வருகிறது என்ற தகவல்: தேர்தல் அதிகாரி சோதனையில் ஏமாற்றம்
மதுரை விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று மாலை 4.40க்கு வந்தது. அந்த விமானத்தில் பணம் கட்டுக்கட்டாக வருகிறது என்று தேர்தல் பறக்கும்படை அதிகாரிக
மதுரை விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று மாலை 4.40க்கு வந்தது. அந்த விமானத்தில் பணம் கட்டுக்கட்டாக வருகிறது என்று தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதை அடுத்து அதிகாரிகள் விமானத்தை சோதனையிடச் சென்றுள்ளனர்.
ஆனால் விமான நிலைய அதிகாரிகள் அனைவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பறக்கும்படை அதிகாரி துணை தாசில்தார் முருகையாவுக்கு மட்டும் அனுமதி அளித்ததை அடுத்து, அவர் விமானத்தில் சோதனை நடத்தினார்.
அந்த சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. திசைதிருப்பும் தகவல் இது என்று அந்த அதிகாரி கூறிவிட்டு ஏமாற்றத்துடன் சென்றார். இந்த சோதனையை அடுத்து சற்று நேரம் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.