முகப்பு
தற்போதைய செய்திகள்

1993-ஆம் ஆண்டில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் கடந்த 1993-ஆண் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:51 AM
பகிர்:

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் கடந்த 1993-ஆண் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் திங்கள்கிவமை கைது செய்தனர்.

 அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் 7-வது தெருவில் வசித்து வந்த செல்வராஜ் என்பவர் அதே ஊரைச்சேர்ந்த புனிதவதி என்பவரின் வீட்டில் ஜரிகையை திருடி விற்றாராம். இதனால் புனிதவதி, பூபாலன், விஜயகுமார், சங்கர் மற்றும் சுந்தரம் என்கிற சுந்தரவடிவேலு ஆகியோர் செல்வராஜை கொலை செய்ததாக அப்போது ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளராக இருந்த சிஙாகாரவேல் வழக்கு பதிந்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தார். இவ்வழக்கில் இவர்கள்தான் குற்றவாளிகள் எந தகுந்த சாட்சியங்களுடன் நிருபிக்கப்படாததால் கடந்த 2006-ஆம் ஆண்டில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் சுந்தரத்தை தவிர மற்றவர்கள் விடுதலை  செய்யப்பட்டார்.

  சுந்தரம் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானதால் அவரை கைது செய்ய 2002-ல் சுந்தரத்திற்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தணிப்படை போலீசார் திருப்பூரில் தலைமறைவாக இருந்த நமச்சிவாயம் மகன் சுந்தரம் என்கிற சுந்தரவடிவேலுவை(53) கைது செய்து ஜயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பாலகிருஷ்ணன்  15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.