ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவர் மீது தாக்குதல்: மூவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவர் மீது தாக்குதல்: மூவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரைத் தாக்கி காயப்படுத்திய வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஆகாசம்பட்டி, வடக்குத் தெரு காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தனராஜ். இவரது வீட்டின் தகரக் கதவை யாரோ திறந்து வைத்து, வீட்டினுள் மின் விளக்குகளை எரியவிட்டுச் சென்றுள்ளார்கள். இதனையடுத்து தனராஜ் வீட்டின் வெளியே நின்று பொதுவாக சப்தம் போட்டுக் கொண்டிருந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்தையா (எ)ராஜாக்கனி (54), இவரது மகன்கள் உருண்டை (எ) தனராஜ் (24), தமிழ்ச்செல்வன் (30) ஆகியோர் சேர்ந்து தனராஜை அவதூறாகப் பேசி, கம்பால் அடி்தது காயப்படுத்தியுள்ளார்கள். இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் த.தனராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தந்தை மற்றும் இரு மகன்களைக் கைது செய்தனர்.