முகப்பு
தற்போதைய செய்திகள்

தரமற்ற பொருட்களை ஊராட்சிகளில் பவர் பம்புகளுக்கு போடுவதால் தொடர் பழுது: பொது மக்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டத்தில், கிராமங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பவர் பம்புகள் பழுதானால், தரமற்ற பொருட்களைப் போட்டு ஊராட்சிகள் பழுது நீக்கம் செய்வதால் இவை தொடர்ந்து பழுதாகவே உள்ளது.

தற்போதைய செய்திகள்

தரமற்ற பொருட்களை ஊராட்சிகளில் பவர் பம்புகளுக்கு போடுவதால் தொடர் பழுது: பொது மக்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டத்தில், கிராமங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பவர் பம்புகள் பழுதானால், தரமற்ற பொருட்களைப் போட்டு ஊராட்சிகள் பழுது நீக்கம் செய்வதால் இவை தொடர்ந்து பழுதாகவே உள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில், கிராமங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பவர் பம்புகள் பழுதானால், தரமற்ற பொருட்களைப் போட்டு ஊராட்சிகள் பழுது நீக்கம் செய்வதால் இவை தொடர்ந்து பழுதாகவே உள்ளது.

இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஓ. தரம் பெற்ற, தரமான உதிரி பாகங்களை, அரசு அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று, அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களைக்கொண்டு ஊராட்சிகள் பணிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.கிராம ஊராட்சிகளில் மின் விளக்குகள் பழுது, குடிநீர் வழங்கும் பவர் பம்புகள் பழுது உள்ளிட்டவற்றை அந்தந்த ஊராட்சிகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதியிலிருந்து அவை பராமரித்து வருகின்றன. கடந்த காலங்களில் வருமான வரி மற்றும் விற்பனை வரி செலுத்தும் மின்சாதன விற்பனையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு, கிராம ஊராட்சிகளுக்கு இதுபோன்ற பொருட்களை விநியோகிக்க ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிப்பார்கள். இதில் ஒவ்வொரு பொருட்களுக்கான விலையையும் மாவட்ட நிர்வாகம் அங்கீகாரம் செய்யும். விண்ணப்பிப்பவர்களில் தகுதியான சுமார் 20 ஒப்பந்ததாரர்களை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து இவர்களிடம் இருந்துதான் பொருட்களைப் பெற்று மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகள் வேலைகளை செய்ய வேண்டும் என்ற உறுதியான நடைமுறை இருந்தது.

மேலும் இந்த ஒப்பந்ததாரர்கள் ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஓ. தரம் பெற்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒவ்வொரு ஆண்டும்,  ஏப்ரல் 1-ம் தேதி மாவட்ட நிர்வாகம் அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர்களை அறிவிக்கும். இவர்களிடம் இருந்து பொருட்களைப் பெற்றே ஊராட்சிகள், அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர்களைக் கொண்டு பணிகளைச் செய்து வந்தது.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவில்லை. அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் ஏதாவது மின் விளக்கு, பவர் பம்பு உள்ளிட்டவற்றில் பழுது ஏற்பட்டால் தரமற்ற உதிரி பாகங்களை போட்டு, அங்குள்ள யாரையாவது வைத்து வேலைகளை செய்கிறார்கள். மறுபடியும சில நாட்களில் அதைவிட பெரிய பழுது ஏற்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க இயலாமல் போய்விடுகிறது.

இதனால் மாவட்டத்தில் பல கிராமங்களில் குடிநீர் இல்லை என்ற செயற்கையான பிரச்னை ஏற்பட்டு அரசிற்கு அவப்பெயர் ஏற்படுகிறது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சிக்கு ரூ.5 லட்சம் அரசு வழங்குகிறது என்றால், அதில் ரூ.1 லட்சத்தை பஞ்சாயத்து எழுத்தர் மற்றும் துப்புரவு பணியார்கள் உள்ளிட்டோரின் ஊதியத்திற்காக வைத்துக் கொண்டு மீதமுள்ள ரூ.4 லட்சத்தை தலைவர் துணைத் தலைவர்கள் சேர்ந்து போலியாக பில்கள் போட்டு எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் கிராமங்களில் பணிகள் ஏதும் நடப்பது இல்லை.

மாவட்ட நிர்வாகம் கிராமங்களில் மின்சாதனங்களில் ஏற்படும் பழுதை அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலமே தரமான பொருட்களைக் கொண்டு செய்ய நடவடிக்கை எடுத்து அரசுப் பணம் வீணாவதைத் தடுத்து பொது மக்கள் நலன் காக்க வேண்டும் என்றனர்.மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் கிராமங்களில் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்து, அரசுப் பணம் வீணாவதைத் தடுத்து பொது மக்கள் நலன் காக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →