பண்ருட்டியில் மழையுடன் தொடங்கிய கத்திரி வெயில்
பண்ருட்டியில் மழையுடன் தொடங்கிய கத்திரி வெயிலின் தாக்கம், முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கடுமையாகவே காணப்பட்டது.
பண்ருட்டியில் மழையுடன் தொடங்கிய கத்திரி வெயிலின் தாக்கம், முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை கடுமையாகவே காணப்பட்டது.
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கி வரும் மே 27-ம் தேதி வரை தொடர்ந்து 24 நாள்கள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி மற்றும் தானே புயல் போன்ற இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். இதனால் கடந்த சில ஆண்டுகளாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. மழையின்றி வறட்சி நிலை தொடர்வதால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கும் என கூறுகின்றனர் சமூக ஆர்வளர்கள்.
இந்நிலையில், அக்னி நட்சத்திரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. ஒரு சில நிமிடங்கள் பெய்த மழையை தொடர்ந்து வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.