கலசலிங்கம் பல்கலை.யில் ஒரே ஆண்டில் 57 நிறுவனங்கள் வளாக நேர்காணல்: வேந்தர்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வியாண்டில் மட்டும் 57 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வளாக நேர்காணலை நடத்தி மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக வேந்தர் க.ஸ்ரீதரன் கூறினார்.
தற்போதைய செய்திகள்கலசலிங்கம் பல்கலை.யில் ஒரே ஆண்டில் 57 நிறுவனங்கள் வளாக நேர்காணல்: வேந்தர்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வியாண்டில் மட்டும் 57 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வளாக நேர்காணலை நடத்தி மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக வேந்தர் க.ஸ்ரீதரன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வியாண்டில் மட்டும் 57 உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் வளாக நேர்காணலை நடத்தி மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக வேந்தர் க.ஸ்ரீதரன் கூறினார்.
பல்கலைக்கழகத்தில் துபாயில் உள்ள பெர்கோ நிறுனம் நடத்திய வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா கல்வி நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பணி நியமன உத்தரவுகளை வழங்கி வேந்தர் க.ஸ்ரீதரன் பேசுகையில் கூறியதாவது: 2013-14 கல்வியாண்டில் மட்டும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் டி.சி.எஸ்., சி.டி.எஸ்., டேட்டா பேட்டர்ன், டெக் மகேந்திரா, எஸ்.ஆர்.எம். டெக்னாலஜி, வோல்டாஸ், எலைட், ஸைபோ, எச்.சி.எல். உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இந்தியக் கடற்படை அதிகாரிகளும் வந்திருந்து வளாக நேர்காணலை நடத்தினர். மொத்தத்தில் 57 நிறுவனங்கள் வருகைபுரிந்து வளாக நேர்காணலை நடத்தியுள்ளது.
இதில் இறுதியாண்டு மாணவர்களில் 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். பணி நியமனம் பெற்றவர்கள் ஜூன் 1-ம் தேதி பணியில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.டீன் கார்பரேட் மற்றும் பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் பேசுகையில், நேர்காணலில் மாணர்கள் வெற்றி பெறுவதற்கு காரணம், மாணவர்கள் பி.டெக். முதலாம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததிலிருந்தே அவர்களுக்கு நேர்காணலுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அதிகாரி பேராசிரியர் அலாவுதீன் பேசுகையில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் வருகைபுரிந்து வளாக நேர்காணல் நடத்துவதற்கு காரணம் இங்கு, நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் 16 துறைகளில் படிக்கிறார்கள் என்றார் அவர்.பணி நியமன உத்தரவு பெற்ற மாணவர்களையும், வளாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்த பேராசிரியர்களையும் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவண சங்கர் பாராட்டினார்.