இளைஞர் மீது தாக்குதல்: ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை சாதியைக் கூறி இழிவுபடுத்தி ஆபாசமாகப் பேசி தாக்கியதாக ஒருவர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர்
தற்போதைய செய்திகள்இளைஞர் மீது தாக்குதல்: ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை சாதியைக் கூறி இழிவுபடுத்தி ஆபாசமாகப் பேசி தாக்கியதாக ஒருவர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை சாதியைக் கூறி இழிவுபடுத்தி ஆபாசமாகப் பேசி தாக்கியதாக ஒருவர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம் மகன் ரவி (35). இவரது நண்பர் இதே இடத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ்.செவ்வாய்கிழமை இரவு, அயன்நத்தம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள மருந்துக்கடை வழியே இரு சக்கர வாகனத்தில் ரவி சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த ரமேஷிடம், ரவி நட்பின் அடிப்படையில் நலம் விசாரித்துள்ளார். பேசிக்கொண்டிருக்கும் போதே ரமேஷ், ரவியின் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்து வைத்துக் கொண்டாராம். பின்னர் ரமேஷ், ரவியை சாதியைக் கூறி இழிவாகப் பேசி, ஈஸ்வரனிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தர மாட்டாயா? எனக் கூறி ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனையடுத்து ரவி, நான் காவல் நிலையம் போகிறேன் என்று கூறியுள்ளார்.
உன்னை உயிரோடு விட்டால்தானே காவல் நிலையம் போவாய் என்று கூறி, இரும்புக் கம்பியால் ரமேஷ், ரவியைத் தாக்கியுள்ளார். அங்கிருந்து ரவி, நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது வழியே வந்து வழிமறித்த ரமேஷ், வண்டியை காலால் மிதித்து தள்ளி விட்டுள்ளார். இதில் ரவி கீழே விழுந்துள்ளார்.
இது குறித்து ரவி, நத்தம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.ரமேஷ் புகார்: ரமேஷ், ரவி தன்னை ஆபாசமாகப் பேசி, தனது கை விரலைக் கடித்துவிட்டதாக நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.