தற்போதைய செய்திகள்

மீட்கப்பட்ட 14 குழந்தைத் தொழிலாளர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பு: ஒரு மாணவர் மாநிலத்தில் முதலிடம்

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 14 மாணவர்கள், தொடர்ந்து பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில் வெண்ணந்தூர் அரசுப் பள்ளி

தமிழ்ச்செல்வன்

குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட 14 மாணவர்கள், தொடர்ந்து பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில் வெண்ணந்தூர் அரசுப் பள்ளி மாணவர் எஸ்.கோபால், 1144 மதிப்பெண்கள் பெற்று சிறப்பு பள்ளிகள் அளவில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

சட்டப்படி 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் பணியமர்த்தக்கூடாது. எனினும், குடும்ப வறுமை, இதர காரணங்களால் தமிழக த்தின் பல இடங்களிலும் 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களாக பணியாற்றும் சிறுவர், சிறுமிகளை மீட்டு மீண்டும் பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறிக் கூடங்கள், செங்கல் சூளைகள், நூற்பாலைகள், இதர தொழில் கூடங்களில் பணியமர்த்தப்பட்டு மீட்கப்பட்ட 14 குழந்தைகள், சிறப்பு பள்ளியில் பயிற்சி பெற்ற பிறகு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன்படி, வெண்ணந்தூர் சிறப்புப் பள்ளி மாணவர் எஸ்.கோபால், 1144 மதிப்பெண்களும், அம்மன்நகர் சிறப்புப் பள்ளி மாணவி ஆர்.ரூபாதேவி 1031, சுபாஷ்நகர் சிறப்புப் பள்ளி மாணவி ஏ.ஜீவா 1006, அதே சிறப்புப் பள்ளி மாணவி கே.ஜனனி 975, சிஎன் பாளையம் சிறப்பு பள்ளி மாணவி எஸ்.நளினி 917, பாப்பம்பாளையம் சிறப்பு பள்ளி மாணவர் எஸ்.அலாவுதீன் 913, கே.ஓலப்பாளையம் சிறப்புப் பள்ளி மாணவி எஸ்.கல்கி 801 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

மேலும், எலந்தகுட்டை சிறப்பு பள்ளி மாணவர் எஸ்.அல்அமீன், சுபாஷ் நகர் சிறப்புப் பள்ளி மாணவர் எம்.கோகுல்கிருஷ்ணன், ஒட்டமெத்தை சிறப்புப் பள்ளி மாணவி எஸ்.ரம்யா 750, பாப்பம்பாளையம் சிறப்பு பள்ளி மாணவர் என்.பிலால் 683, அரசங்காட்டுமேடு சிறப்பு பள்ளி மாணவர் ஜே.கௌரிசங்கர் 645, ஒட்டமெத்தை சிறப்பு பள்ளி மாணவி டி.அபிராமி 602, அதே சிறப்பு பள்ளி மாணவி கே.அபிராமி 544 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்காக மொத்தம் 21 சிóறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வில் இந்த பள்ளிகள் அளவில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.கோபால், 1144 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடமும், அரசு பள்ளிகள் அளவில் நாமக்கல் மாவட்டத்தில் மூன்றாமிடமும் பிடித்துள்ளார்.

இவர் குடும்ப வறுமை காரணமாக 6ஆம் வகுப்பு படிக்கும்போது பாதியில் நின்றுவிட்டு 2 ஆண்டுகள் விசைத்தறி கூடத்தில் வேலை செய்தார். பின்னர், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்களால் மீட்கப்பட்டு படிக்க வைக்கப்பட்டதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தற்போது பிளஸ் 2 தேர்வில் 1144 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொடர்ந்து இவர் எம்பிபிஎஸ் படிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கொடையாளர்களின் உதவியையும் எதிர்நோக்கியுள்ளார். இந்த மாணவருக்கு உதவ விரும்புவோர் 72006 51382 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT