லாரி மீது வேன் மோதியதில் இளைஞர்கள் 2 பேர் சாவு
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் 2 பேர்
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே சனிக்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து விருதுநகருக்கு பருப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. லாரியை காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள கட்டியாப்பந்தல் பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் மணிகண்டன் (24) ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகே உள்ள இரூர் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் லாரி வந்தபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற வேன் மோதியது.
இதில், வேனில் இருந்த கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள மண்குளங்கள் பகுதியை சேர்ந்த மகாபூர் மகன் ஹைசம் (23), ஒரிஸô மாநிலம், பாட்னா அருகே உள்ள காகிபாரா பகுதியை சேர்ந்த ஆரியா ஜின்னா மகன் தீபக் (19) ஆகியோர் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.