மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 13-ம் சுற்றின் நிறைவில் அதிமுக 1.80 லட்சம் வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 13-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,80,364 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 13-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 1,80,364 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.
13-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை :
ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 27,667. செ. ஹைதர் அலி (மமக)- 12,344. க. அகோரம் (பாமக)- 7,254. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 3,174. 13 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 3,44,632. செ. ஹைதர்அலி (மமக)- 1,64,268. க. அகோரம் (பாமக)- 1,03,766. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 39,860.
13 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட 1,80,364 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் தொடர்ந்து முன்னிலைப் பெற்றுள்ளார்.