முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கையில் வரலாறு மீண்டும் திரும்பியது: அதிமுகவினர் புகழாரம்

விடுதலைப் போராட்டக் காலத்தில் சிவகங்கைக்கு மட்டுமே ஒர தனிச்சிறப்பு உண்டு. விடுதலைப் போராட்டக் காலத்தில் ஜான்சிராணி லட்சுமி பாய் உள்பட பல மன்னர்கள் தங்களது நாட்டினை ஆங்கிலேயர்களிடம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:17 AM
பகிர்:

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக அதிமுக வெற்றி பெற்றது சிவகங்கையில் வரலாறு மீண்டும் திரும்பியதாக அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினர்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் சிவகங்கைக்கு மட்டுமே ஒர தனிச்சிறப்பு உண்டு. விடுதலைப் போராட்டக் காலத்தில் ஜான்சிராணி லட்சுமி பாய் உள்பட பல மன்னர்கள் தங்களது நாட்டினை ஆங்கிலேயர்களிடம் பறிகொடுத்தனர். ஆனால் சிவகங்கையின் வேலு நாச்சியார் மட்டுமே 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு இழந்த நாட்டை மீட்ட ஒரே சமஸ்தானம் சிவகங்கை என்பது வரலாறு.சிவகங்கை தொகுதியில் தற்போது இரண்டாவது முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியை முதல்வர் ஜெயலலிதா மீட்டுள்ளார் என அக்கட்சியின் நிர்வாகிகள் புகழாரம் சூட்டுகின்றனர்.

1967ஆம் ஆண்டில் சிவகங்கை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு முதல் இரண்டு தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த தா.கிருட்டிணன் வெற்றி பெற்றார். திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக உதயமான பின்னர் 1977ல் சிவகங்கை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பெரியசாமி தியாகராஜன் அதிமுகவின் வெற்றிக் கணக்கினை பதிவு செய்தார். இதன் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றியைப் பெற்று வந்துள்ளனர்.

Advertisement

இந்த முறை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதுடன் எதிர்த்துப் போட்டியிடும் காங். கட்சியின் வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களிடம் சூளுரை செய்தார். இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 2,29,385 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் காங்கிரஸ் கட்சியின் டெபாசிட் தொகையையும் ஜெயலலிதா இழக்கச் செய்துள்ளார்.

இதன் மூலம் 37ஆண்டுகளாக இத்தொகுதியை பிடித்து வைத்திருந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து சிவகங்கையை மீட்டு மீண்டும் வரலாற்றை முதல்வர் நினைவுபடுத்தி உள்ளதாக கட்சியினர் புகழாரம் சூட்டுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments