தற்போதைய செய்திகள்

சேலம் மாநகராட்சியில் நாளை முதல் 2 நாள்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மே 24, 25 ஆகிய இரு நாள்களிலும் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

க. தங்கராஜா

சேலம் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மே 24, 25 ஆகிய இரு நாள்களிலும் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேட்டூரில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதேநேரம், மாநகராட்சிப் பகுதிகளான ரெட்டிப்பட்டி, மாமாங்கம், சாரதா கல்லூரி சாலை, கொண்டலாம்பட்டி பை-பாஸ் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் கசிவு சரி செய்யப்பட வேண்டியுள்ளது.

 இந்த பணிகள் நடைபெற உள்ளதை அடுத்து சேலம் மாநகராட்சிப் பகுதி முழுவதிலும் மே 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்களிலும் குடிநீர் வினியோகம் இருக்காது என்றும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாநகராட்சி ஆணையர் க.இரா.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT