சிவகங்கை அருகே மான் வேட்டையாடியதாக 6 பேர் கைது
சிவகங்கை அருகே உள்ளது புலியடிதம்பம். இங்கு வின்சென்ட் (58) என்பவரின் தோட்டத்திற்கு வழி தவறிய புள்ளிமான் ஒன்று கடந்த புதன்கிழமை வந்தது. இந்த மானை வின்சென்ட், இதே பகுதியைச் சேர்ந்தத
சிவகங்கை அருகே மான் வேட்டையாடியதாக 6 பேரை வனத்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை அருகே உள்ளது புலியடிதம்பம். இங்கு வின்சென்ட் (58) என்பவரின் தோட்டத்திற்கு வழி தவறிய புள்ளிமான் ஒன்று கடந்த புதன்கிழமை வந்தது. இந்த மானை வின்சென்ட், இதே பகுதியைச் சேர்ந்தத வெள்ளையன் (45), காளீஸ்வரன் (28), ஜேம்ஸ் (46), கருப்பையா (55), சேவியர் (40) ஆகியோர் கொன்று அதை சமைத்து தின்றனராம்.
இது குறித்த ரகசியத் தகவல் சிவகங்கை வன அலுவலர் குருசாமிக்கு சனிக்கிழமை கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்த வனச்சரக அலுவலர் மதிவாணனுக்கு உத்தரவு பிறப்பித்தார். வனவர்கள் செல்வமணி, ஜெயராமன், வனக் காப்பாளர்கள் மலைச்சாமி, சபரிராஜன், சண்முகம், அப்பாசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மானின் முடி, எலும்பு மற்றும் தோட்டத்தில் இருந்த ரத்தக்கறையினை சேகரித்து மான் கொல்லப்பட்டதை உறுதி செய்தனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து 1978ஆம் ஆண்டு வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வின்சென்ட் உள்ளிட்ட 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.