விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடத்தில் 2923 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பேற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதை குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தந்த பள்ளி வளாகங்களில் உள்ள தகவல் பலகையில் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டதை பார்த்து மாணவ, மாணவிகள் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் விவரங்களை அறிந்து கொண்டனர்.இம்மாவட்டத்தில் பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளனர். ஆங்கிலம்-54, கணக்கு 537, அறிவியல்-2923, சமூக அறிவியல்-1562 பேர் பெற்றுள்ளனர். கடந்த கல்வி ஆண்டுகளில் கணக்கு பாடங்களில் தான் அதிகம் பேர் 100 மதிப்பெண்கள் பெற்று வந்தனர். ஆனால், நிகழாண்டில் அறிவியல் பாடத்திலும், அதையடுத்து சமூக அறிவியல் பாடத்திலும் அதிகம் பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.