முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி: ராஜபக்க்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை அருகே ரயில் மறியல்

16வது மக்களவைக்கானத் தேர்தல் முடிவு பெற்று மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பலம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:22 AM
பகிர்:

பிரதமர் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

16வது மக்களவைக்கானத் தேர்தல் முடிவு பெற்று மோடி தலைமையிலான பாஜக பெரும்பான்மை பலம் பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் அதிபர் ராஜபக்க்ஷே விழாவில் பங்கேற்க உள்ளார்.

இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் சிவகங்கை நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி நோக்கி செல்லும் பயணிகள் ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

Advertisement

ரயில் நிலையத்திற்கு 1 கீமீ தொலைவுக்கு முன் பிள்ளைவயல் காளியம்மன் கோவில்-கீழ்பாத்தி கண்மாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த முருகானந்தம், வேங்கை, சகாயம் உள்பட 13 பேர் கருப்புச் சட்டை அணிந்து தண்டவாளத்தில் ரயிலை நோக்கி ஓடியபடிச் சென்று மாலை 4.50 மணிக்கு ரயிலை மறித்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் வரை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்த பின்னர் ரயில் தாமதமாக சிவகங்கை ரயில் நிலையத்திற்குச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments