முகப்பு
தற்போதைய செய்திகள்

சிவகங்கை அருகே நீரில் மூழ்கி 2 பெண்கள் சாவு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம் கண்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது உறவினர் தேவகோட்டையை அடுத்த நாகாவயல் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சேவியர். இவர் குஜராத் அரசின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:22 AM
பகிர்:

சிவகங்கை அருகே நீரில் மூழ்கி 2 பெண்கள் நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம் கண்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது உறவினர் தேவகோட்டையை அடுத்த நாகாவயல் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.சேவியர். இவர் குஜராத் அரசின் சிவில் ஏவியேஷன் துறையில் உதவி இயக்குநராக இருந்து வருகிறார். விடுமுறைக்காக அந்தோணிசாமியின் வீட்டுக்கு தனது மகள் ஜெனிபருடன் (16) வந்திருந்தார்.

திங்கள்கிழமை ஜெனிபர் அந்தோணியின் மகள் அன்புக்கிரேசி(17) மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த அலங்காரம் மகள் ஜெபஸி ஆகியோர் கண்டுப்பட்டியில் உள்ள புது ஊருணியில் குளிக்கச் சென்றனராம். அப்போது அன்புக்கிரேசி, ஜெனிபர் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினராம். இது குறித்து ஜெபஸி ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தார். பொது மக்கள் ஊருணியில் இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அன்புக்கிரேஸி சம்பவ இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது வழியிலேயே ஜெனிபர் இறநது போனார். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டது.

Advertisement

சம்பவம் குறித்து மதகுபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments