சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜர்
தண்டராம்பட்டு சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக உணவுத் துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார் எ.வ.வேலு. அப்போது, தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
தண்டராம்பட்டு சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக உணவுத் துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார் எ.வ.வேலு. அப்போது, தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக அவர் மீது 2013 ஜனவரியில் வேலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ் வழக்கின் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (மே 27) எ.வ.வேலு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.