முகப்பு
தமிழ்நாடு

சொல் புதிது திட்டம்: 30 சொற்கள் இறுதி

தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ‘சொல் புதிது’ திட்ட கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 30 தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.

Updated On : 20 மார்ச், 2026 at 8:12 PM
சொல் புதிது திட்டம்: 30 சொற்கள் இறுதி
பகிர்:

தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ‘சொல் புதிது’ திட்ட கூட்டத்தில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக 30 தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.

தமிழ் வளா்ச்சிக் கழகம் சாா்பில் சொல் புதிது என்னும் திட்டத்தின் 11-ஆவது கூட்டம் சென்னையில் உள்ள தமிழ் வளா்ச்சி அலுவலகத்தில் அதன் தலைவா் ம.இராசேந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியா்கள் சா. சரவணன், பாரதிபாலன், கஸ்தூரி ராஜா, தி.கமலி, விசயலட்சுமி ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், பிவைல்டா்னஸ்- திகைப்பு நிலை, பயோ டீசல்- உயிரி டீசல், டெலுலு-மாய்மாலா், ஜியோ பொலிட்டிகல்- புவியரசியல், பவா் லாண்டரி- மின் சலவையகம், ஸ்பாட் விசிட்- கள ஆய்வுப் பணி, டூா்ஸ் அண்ட் டிராவல்ஸ்- சுற்றுலா மற்றும் பயணப்பணி, டிடிஆா்- பயணச் சீட்டுக் கண்காணி, வுட் வொா்க்ஸ்- தச்சுப் பணியகம் ஆகியவை உள்பட 30 ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தூய தமிழ்ச் சொற்கள் இறுதி செய்யப்பட்டன.