தெரியுமா?
மோட்டார், பெடல் என்ற இரு சொற்கள் இணைந்து 'மொபெட்' எனும் சொல் உருவானது.
மோட்டார், பெடல் என்ற இரு சொற்கள் இணைந்து 'மொபெட்' எனும் சொல் உருவானது.
-முக்கிமலை நஞ்சன்
நெதர்லாந்தில் நோபல் பரிசு பெற்றவர்கள் அதிகம் உள்ளனர். இங்கு வசிப்போர் அதிகம் பேர் மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். 'ஐரோப்பாவின் தோட்டம்' என்று இந்த நாடு அழைக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
பிறந்த சில மாதங்கள் கழித்தே குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்கத் தொடங்கும். ஆனால், பெரும்பாலான விலங்கினங்கள் இதற்கு விதிவிலக்கு. சுறா இனங்களில் பலவும் நன்கு வளர்ந்த பற்களுடன்தான் பிறக்கின்றன. பிறந்தவுடனே இரையை வேட்டையாடவும், சுதந்திரமாக வாழவும் தேவையான உடல் அமைப்பை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன.
அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களில் ஜிம்மி கார்ட்டர் மட்டுமே மருத்துவமனையில் பிறந்தவர். இவருக்கு முன்னர் அதிபர்களாக இருந்த 38 பேருமே அவரவர் வீட்டிலேயே பிறந்தவர்கள்.
-கோட்டாறு ஆ.கோலப்பன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.