சிதம்பரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் பெண் சடலம் கண்டெடுப்பு
சிதம்பரம் வைப்புச்சாவடி பகுதியைச் சேர்ந்த முருகன் (40). சமையல் வேலை செய்யும் இவரது மனைவி பெயர் குஞ்சம்மாள் (35). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கட்டட வேலை செய்யும் குஞ்சம்மாள்
சிதம்பரம் நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் சடலம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
சிதம்பரம் வைப்புச்சாவடி பகுதியைச் சேர்ந்த முருகன் (40). சமையல் வேலை செய்யும் இவரது மனைவி பெயர் குஞ்சம்மாள் (35). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கட்டட வேலை செய்யும் குஞ்சம்மாள் புதன்கிழமை மாலை வேலைக்காக வீட்டை விட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை காலை சபாநாயகர்தெரு சீர்காழி செல்லும் சாலையில் டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் முகத்தில் காயங்களுடன் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிதம்பரம் நகர போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, குஞ்சம்மாள் குடியிருப்பு மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூரிலிருந்து தடய அறிவியல் துறை நிபுணர் குழு மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.