முகப்பு
தற்போதைய செய்திகள்

அதிமுக முன்னாள் செயலர் மீது ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு

தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (53). அதிமுக முன்னாள் மாவட்டச் செயலரான  இவருக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் டூவிபுரத்தில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2012 ஆம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:28 AM
பகிர்:

பெண்ணிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடி மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸôர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு

தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (53). அதிமுக முன்னாள் மாவட்டச் செயலரான  இவருக்கு சொந்தமான 10 சென்ட் நிலம் டூவிபுரத்தில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு விலைக்கு வாங்குவதற்காக ஆறுமுகநேரி அருகே உள்ள பேயன்விளை கிராமத்தைச் சேர்ந்த குருதேவ் மனைவி உமா நந்தினி முடிவு செய்துள்ளார்.

அதன்படி,  சென்டுக்கு 9 லட்சம் என்ற அடிப்படையில் விலையை பேசி முன்பணமாக ரூ. 6 லட்சத்தை ஆறுமுகநயினாரிடம் உமாநந்தினி வழங்கினாராம். உமாநந்தினியன் கணவர் வெளிநாட்டில் உள்ளதால் நிலத்தின் மீது ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என உமா நந்தினி ஆவணங்களை சரிபார்த்துள்ளார்.அப்போது, ஆறுமுகநயினார் குறிப்பிட்ட நிலத்துக்கு பட்டா இல்லை என்றும் ஆவணங்களில் தகவல்கள் முரணாக இருப்பதாகவும் கருதிய உமா நந்தினி நிலத்தை வேண்டாம் என்றும் முன்பணத்தை திருப்பித் தந்துவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பணத்தை திருப்பி கொடுக்க மறுத்த ஆறுமுகநயினார்  நிலம் எப்போது விற்பனை ஆகிறதோ அப்போது தருகிறேன் என கூறியுள்ளார். இதுதொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆறுமுகநயினாரின் வீட்டுக்குச் சென்று பணத்தை திரும்பத் தருமாறு உமா நந்தினி கேட்டாராம்.அப்போது,  ஆறுமுகநயினார், அவரது மனைவி ராஜலட்சுமி, மகன் ஆறுமுக கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து உமாநந்தினியை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினராம். இதனால், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல ஐஜி ஆகியோரிடம் உமாநந்தினி புகார் மனு தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை உத்தரவிட்டார். இதையடுத்து ஆறுமுகநயினார் மற்றும் அவரது மனைவி, மகன் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், தரக்குறைவாக பேசுதல் (406, 420, 506- 2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸôர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.