அண்ணாமலைப் பல்கலையில் பூட்டியிருந்த பீரோவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ரூ.15 லட்சம் போலீஸில் ஒப்படைப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டி அங்கீகாரத்திற்கு அனைத்து துறைகளிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொறியியல் புல முதல்வர் அலுவலக வளாகத்தில் உள்ள கணினி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பூட்டியிருந்த பீரோவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.15 லட்சம் தொகை அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாக் கமிட்டி அங்கீகாரத்திற்கு அனைத்து துறைகளிலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொறியியல் புல முதல்வர் அலுவலக வளாகத்தில் உள்ள கணினி அறையில் இருந்த பழைய பீரோக்களை அலுவலர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்கனவே பணியாற்றிய புல முதல்வரின் புழக்கத்தில் வைத்திருந்த பீரோவை திறந்து சுத்தம் செய்த போது 500 நோட்டுகள் கொண்ட கட்டுகள் (ரூ.15 லட்சம்) ரொக்கப்பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை எடுத்த அலுவலக கணினி துறைத் தலைவர் ராமலிங்கம், அத்தொகையை சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்து புகார் அளித்துள்ளார். அப்புகாரில் கடந்த அக்.26-ம் தேதி அலுவலகத்தை சுத்தம் செய்த போது ஏற்கனவே உள்ள துறைத் தலைவர் வைத்திருந்த பீரோவை திறந்த போது ரூ.15 லட்சம் தொகை இருந்தது. இந்த பணம் யாருடையது என்பது தெரியவில்லை என ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் உரிமம் கோர ஆள் இல்லாததால் சிஆர்பிசி 102 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் தொகை ரூ.15 லட்சம் தொகையை ஒப்படைத்தனர்.