முகப்பு
தற்போதைய செய்திகள்

இலவச வீட்டுமனை பட்டா இருக்கிறது, ஆனால் இடம் இல்லை: நெல்லை ஆட்சியரிடம் புகார் மனு

அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா 2009 ஆம் ஆண்டு முதல் எங்கள் கைகளில் இருக்கிறது, ஆனால், அதற்கான இடம் எது என்பதை அளந்து தர அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:10 AM
பகிர்:

அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா 2009 ஆம் ஆண்டு முதல் எங்கள் கைகளில் இருக்கிறது, ஆனால், அதற்கான இடம் எது என்பதை அளந்து தர அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென திருநெல்வேலி ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். மானூர் ஊராட்சி ஒன்றியம், களக்குடி புதுக்காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:0

மானூர் ஊராட்சி ஒன்றியம், களக்குடி கிராமத்தைச் சேர்ந்த புதுக்காலனியில் வசித்து வரும் 32 பேருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த இடத்துக்கான வரைபடமும் எங்களிடம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை முறையாக அளவீடு செய்து நான்கு முனைகளிலும் அடையாளம் காட்டித் தரப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், வீட்டுமனையின்றி எங்கள் குழந்தைகளுடன் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கு உரிய இடத்தை அடையாளம் காட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கிராம மக்கள் கூறுகையில், மனுநீதிநாள் முகாம்கள், கிராமசபை கூட்டங்களில் நிலம் குறித்து அளிக்கப்பட்ட மனுக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை. எங்களுக்குச் சொந்தமான இடத்தை எங்களுக்கு வழங்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →