முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி ஆண்டாள் கோவிலில் திருமஞ்சன பூஜை வழிபாடு

தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீண்டு பொறுப்பேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் திங்கள்கிழமை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில்

தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி ஆண்டாள் கோவிலில் திருமஞ்சன பூஜை வழிபாடு

தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீண்டு பொறுப்பேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் திங்கள்கிழமை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:10 AM
பகிர்:

தமிழக முதல்வராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீண்டு பொறுப்பேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் திங்கள்கிழமை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் திருமஞ்சன பூஜை வழிபாடு நடைபெற்றது.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஸ்ரீஆண்டாள் கோவிலில், தமிழக முதல்வராக ஜெயலலிலா மீண்டும் பொறுப்பேற்க வேண்டி திருமஞ்சன பூஜை வழிபாடு மற்றும் ஆராதனைகளை நடத்தினர். பூஜைகளை கோவிலின் முத்துபட்டர், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோர் நடத்தினர்.

நிகழ்ச்சியில் சிவகாசி மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், தக்கார் கே.ரவிச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.துரைப்பாண்டியன் (எ) ராஜவர்மன், மகளிர் அணி இணைச் செயலாளர் சக்தி கோதண்டம், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.கே.மயில்சாமி, மாவட்ட கவுன்சிலர்கள் முத்தையா, பெரியசாமி, நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பூஜைகளுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →