முகப்பு
தற்போதைய செய்திகள்

மீனவர்கள் தண்டனை ரத்து கோரி ரயில் மறியல்: நெல்லையில் 46 பேர் கைது

தமிழக மீனவர்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:10 AM
பகிர்:

தமிழக மீனவர்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், பிரசாத், செல்வன் லாங்கெட் லோயலோ ஆகியோருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த தண்டனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திருநெல்வேலி சந்திப்பில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் எஸ்.கே.டி. கண்மணிமாவீரன் தலைமையில் மறியிலில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட இணைச் செயலர் பொட்டல் கண்ணன், கட்சியின் நிர்வாகிகள் கிங்தேவேந்திரன், எட்வின், அழகர்சாமி, கோ. துரைபாண்டியன், நெல்சன், மணிமாறன் மற்றும் பெண்கள் உள்பட 46 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →