தற்போதைய செய்திகள்

நெல்லை மாநகராட்சி பெண் கவுன்சிலரை கட்சியிலிருந்து நீக்கி எஸ்டிபிஐ நடவடிக்கை

எஸ்டிபிஐ கட்சியின்  திருநெல்வேலி மாநகராட்சி 36 ஆவது மாமன்ற உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி தலைமை

ஆர். முருகன்

எஸ்டிபிஐ கட்சியின்  திருநெல்வேலி மாநகராட்சி 36 ஆவது மாமன்ற உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அக் கட்சியின் மாவட்டத் தலைவர் உஸ்மான் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில்,மேலப்பாளையம் 36ஆவது வார்டு வேட்பாளராக மைதீன் பாத்து போட்டியிட்டுவெற்றி பெற்றார். ஆனால், வெற்றி பெற்ற நாள் முதல் வார்டு மக்களுக்கு எந்தவித பணிகளும் செய்துதரவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும், வார்டு பிரச்னைகள் தொடர்பாக மாமன்றக் கூட்டத்திலும் குரல் எழுப்பாமல் அமைதியாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இதுதொடர்பாக, மாமன்ற உறுப்பினரிடமும், அவரது கணவரான செய்யது அப்துல் காதரிடமும் கட்சியின் நிர்வாகிகள் புகார் தெரிவித்து மக்கள் பணி செய்ய வலியுறுத்தப்பட்டது. இதன்பிறகும், மக்கள் பணி செய்யாமலும், கட்சியின் கொள்கை அடிப்படையில் இயங்காமலும் இருந்து வந்தனர். இதையடுத்து இருவரையும் கட்சியின் அடிப்படை செயல்வீரர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி கட்சியின் மாநிலத் தலைமைக் குழு உத்தரவிட்டுள்ளதாக உஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT