தீவிரவாதத்திற்கு எதிராக பிரசாரம், நவ.8-ல் கடலூரில் அமைதி பேரணி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தீவரவாதத்திற்கு எதிராக பிரசாரத்தை வலியுறுத்தி கடலூரில் வருகிற நவ.8-ம் தேதி அமைதி பேரணி நடைபெறவுள்ளது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட பேச்சாளர் கே.தாவூத்கைஸர்
தீவரவாதத்திற்கு எதிராக பிரசாரத்தை வலியுறுத்தி கடலூரில் வருகிற நவ.8-ம் தேதி அமைதி பேரணி நடைபெறவுள்ளது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட பேச்சாளர் கே.தாவூத்கைஸர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வியாழக்கிழமை சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இஸ்லாம் என்றும் போதிப்பது மிதவாதம், எதிப்பது தீவிரவாதம். இஸ்லாம் ஒர் அமைதி மார்க்கம், சாந்தி மார்க்கம், எந்த அளவிற்கு என்றால் யாருடமும் வலிய சண்டைக்கு செல்லக்கூடாது. விலகி செல்வோருடன் வீரம் காட்டக்கூடாது, சமாதனத்திற்கு இணங்குதல் வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. மனித நேயம் வேண்டும், பிறருக்கு உதவுதல் வேண்டும், மனிதர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும் என திருக்குர்ஆன் போதனையும், முகமது நபிகளின் போதனையும் சொல்கிறது. இப்படி இருக்கக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலகில் நடைபெறும் தீவிரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தீவிரவாதத்தில் ஈடுபடுவர்கள் சமூகவிரோதிகளாவார். இஸ்லாமியர்கள் ரயில்நிலையம், பேருந்து நிலையம் பகுதிகளுக்கு செல்லும் போது மக்கள் எங்களை பற்றி தவறாக பார்க்கின்றனர். தீவிரவாதிகளுக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.
தீவிரவாத செயலை யார் செய்தாலும், அதை ஒரு போதும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த அக்.15-ம் தேதி முதல் நவ.15-ம் தேதி வரை தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரசாரம் பல வகையான நோட்டீஸ், பேனர், தெருமனை பிரசாரம், பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றின் வாயிலாக பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். அதனடிப்படையில் கடலூரில் வருகிற நவ.8-ம் தேதி அமைதி பேரணை நடத்தவுள்ளோம் என கே.தாவூத்கைஸர் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்டத் தலைவர் ஏ.அப்துல்ரஜாக், மாவட்டச் செயலாளர் ஜி.அஷ்ரப்அலி, பொருளாளர் சிராஜூதீன், அப்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் எம்.பாஜில்உசேன், ஏ.கே.தாஜ்தீன், அப்துல்சலாம், முகமதுயாசின், கிளை தலைவர் ஆதம், செயலாளர் எம்.முகமது ஹனீப் ஆகியோர் உடன் இருந்தனர்.