முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் 2 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தமிழகத்தில் சில புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சிலர் சட்டவிரோதமாக அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலியில் ஒரு

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:19 AM
பகிர்:

திருநெல்வேலியில் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாரும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் சில புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் சிலர் சட்டவிரோதமாக அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலியில் ஒரு கிட்டங்கியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தச்சநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ரூ.13 லட்சம் மதிப்பிலான 2 ஆயிரம் கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை போலீஸாரும், உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் கருணாகரன், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், என்.எம்.கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமைபறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்து (21) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →