தற்போதைய செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே ஒய்வுபெற்ற பொறியாளர் உள்ளிட்ட இருவர் வெட்டிக்கொலை

சென்னை சாலிக்கிராமத்தைச் சேர்ந்தவர் லெ. செல்லத்துரை (60). ஒய்வுபெற்ற பொறியாளரான இவரது சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய். இதனால் கால்வாயில் உள்ள அவரது பூர்வீக கோயிலான

கவிதன்

ஸ்ரீவைகுண்டம் அருகே வியாழக்கிழமை ஒய்வுபெற்ற பொறியாளர் உள்ளிட்ட இருவரை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை சாலிக்கிராமத்தைச் சேர்ந்தவர் லெ. செல்லத்துரை (60). ஒய்வுபெற்ற பொறியாளரான இவரது சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய். இதனால் கால்வாயில் உள்ள அவரது பூர்வீக கோயிலான குலைகொண்ட அம்மன் கோயிலில் திருப்பணி செய்து ஆண்டுதோறும் வருஷாபிஷேகமும், மாதந்தோறும் பெளர்ணமி பூஜைகளையும் நடத்தி வருகிறாராம். இந்நிலையில் கால்வாயில் உள்ள குலைகொண்ட அம்மன் கோயிலில் பெளர்ணமி பூஜைகள் நடத்துவதற்காக இன்று செல்லத்துரையும், அவரது உறவினர் திருப்புளியங்குடியைச் சேர்ந்த இசக்கித்துரை மனைவி ஆவுடைமுத்துலட்சுமி (22) ஆகியோர் வந்து அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டிருந்தனராம். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்து செல்லத்துரையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்த ஆவுடைமுத்துலட்சுமி ஓடி வந்து தடுத்தாராம். அதில் அவருக்கும் சரமாறியாக வெட்டு விழுந்தது. இதில் ஆவுடைமுத்துலட்சுமி சம்பவ இடத்தியே இறந்தார். உடன் ஆபத்தான நிலையில் இருந்த செல்லத்துரை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராஜமன்னார், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வம், ஸ்ரீவைகுண்டம்  ஆய்வாளர் பிரான்சிஸ், குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜசுந்தர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவுடைமுத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் செல்லத்துரைக்கும் ஆவுடைமுத்துலட்சுமிக்கும் தகாத உறவு இருப்பதாக கூறி கடந்த 2.6.12 அன்று அவரது கணவர் இசக்கித்துரை , செல்லத்துரையை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக இந்த கொலைகள் நடந்ததா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT